fbpx
Connect with us

தொங்கி கொண்டிருக்கும் ஆட்சி!? வாயை விட்டு மாட்டிகொண்ட கருணாஸ்.. இப்ப என்ன நடக்குமோ என்ற பயத்தில்?

karunas mla in trouble

News / செய்திகள்

தொங்கி கொண்டிருக்கும் ஆட்சி!? வாயை விட்டு மாட்டிகொண்ட கருணாஸ்.. இப்ப என்ன நடக்குமோ என்ற பயத்தில்?

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திருவாடானை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் நடிகர் கருணாஸ்.

இந்நிலையில் ஜெ.,வின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் புயல் வீச தொடங்கியது. இதனால் அதிமுக சசிகலா அணி, பன்னீர் அணி என இரண்டாக பிளவு பட்டது.

தற்போது தினகரன் சிறை வாசம், ஜாமீன் என மீண்டும் உட்கட்சி பூசல் விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்நிலையில் நடிகர் கருணாஸ், அதிமுக ஆட்சி சரியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி நீடிக்க வேண்டும்.

முதல்வரை சந்தித்து எங்கள் தொகுதிப் பிரச்சனை, நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக முதல்வரிடம் பேசினேன். தமிழகத்தில் தற்போது ஆட்சி நன்றாக இருக்கிறது. இது தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

எந்த அணியில் அதிமுகவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்த அணிக்கு தான் என் ஆதரவு இருக்கும். நான் முதல் முதலாக எம்எல்ஏ ஆகியிருக்கிறேன்.

ஏதாவது தொகுதிக்கு செய்ய வேண்டும். அதற்காக இந்த ஆட்சி நடக்க வேண்டும். இந்த அரசு இருந்தால்தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top