Tamil Cinema News | சினிமா செய்திகள்
திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு!
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை சென்னைக்கு வரவேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வெகு நாட்களாகவே குழப்பமான அரசியல் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தமிழக கவர்னருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வருக்கும், பேரவை தலைவருக்கும் ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், குழப்பமான அரசியல் சூழலை சரிசெய்ய ஆளுநர் சட்டசபை கூட்டத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் சட்டசபையை கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
