ஸ்டாலின் நடித்து ஹிட் அடித்த சீரியல் தெரியுமா? மனுஷன் கலக்கிருக்கிறார்.. இதோ வீடியோ

பிரபல தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் சேனலில் ஒளிபரப்பான ஸ்டாலின் நடித்த சீரியல் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

சன் டிவி, கே டிவி ,ஜெயா டிவி, விஜய் டிவி என்று தொலைக்காட்சி சேனல்கள் வந்துள்ளன. ஆனால் 80’s காலகட்டத்தில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் தூர்தர்ஷன். தூர்தர்ஷன் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் ஒரே பொழுதுபோக்காக இருந்தது.

கலைஞரின் மகன் ஸ்டாலின் ஒரு தொலைக்காட்சி சீரியலில் நடித்து உள்ளார். அது பலருக்கும் தெரியும். ஆனால் யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.

மு க ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த சீரியல் பெயர் குறிஞ்சிமலர். இந்த சீரியலில் ஸ்டாலினின் பெயர் அரவிந்தன். அதன் பிறகுதான் திமுக தொண்டர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு அரவிந்தன் என பெயர் வைத்து வந்தனர்.

குறிஞ்சி மலர் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் இவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியெல்லாம் “குறிஞ்சி மலர் நாயகனே வருக” என வசனங்களை பதிவிட்ட பேனர்களை வைத்து வரவேற்றனர். இதோ ஸ்டாலின் நடித்த அந்த தொடரின் முழு தொகுப்பு.

Leave a Comment