miui-9

நாம என்னதான் ஐபோன், சாம்சங், HTC னு பிராண்டட் மொபைல்களின் பெருமை பேசினாலும் சத்தமின்றி இவற்றையெல்லாம் ஓரம் கட்டிக்கொண்டே வரும் மொபைல் நிறுவனம்தான் ஜியோமி (MI).

அனைத்து வித வசதிகளையும் பயனாளர்களின் பட்ஜெட்க்கு ஏற்றபடி குறைவான விலையில் வெளியிடுவதும், மாதம் ஒரு முறையாவது தனது அப்டேட்களை வெளியிட்டு புது புது வசதிகளையும், பக் கரக்சன்களையும் செய்து வருகிறது இந்த மொபைல் நிறுவனம்.

miui

இதன் நடப்பு OS MIUI 8 பல வசதிகளை கொண்டிருப்பினும் ஒரு ப்ரிமியம் மொபைல் எக்ஸ்ப்பீரியன்ஸ் இதனிடம் இல்லை என்பது குறையே. இந்த குறையை நிறைவு செய்ய நாளை வெளிவரவிருக்கிறது இதன் புதிய வெர்சன் அப்டேட்டான MIUI 9.

இதன் முதற்கட்டமாக redmi note 4 போன்ற மொபைல்களில் நேற்று முதலே ஆண்டிராய்டின் புதிய வெர்சனான Nougat அப்டேட் வரத்துவங்கிவிட்டது. இதன் தரவிறக்க கோப்பு அளவு 1.3GB.

MIUI 9ன் அதிகாரப்பூர்வ வெளியீடு நவம்பர் இரண்டாம் தேதி என்று கடந்த வாரம் செய்தி வெளியானது. MI நிறுவனத்தின் இந்த செய்தி ட்விட்டரில் பின்வருமாறு பகிரப்பட்டது – “We listened to your requests.

miui

Global MIUI 9 is coming to India on November 2. Are you excited?” அதன்படி நாளை இதன் முழுப்பதிப்பும் கிடைத்துவிடும் என்று அனைத்து MI பயனாளர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

எந்தெந்த மொபைல்களுக்கெல்லாம் நாளை இந்த அப்டேட் கிடைக்கும் என்று பார்ப்போம். Mi 6, Mi 5s Plus, Mi 5s, Mi 5c, Mi 5, Mi 4S, Mi 4c, Mi 4, Mi 3, Mi 2/2S, Mi MIX, Mi Max 2, Mi Max, Mi Note 2, Mi Note/Pro, Mi Pad 2, Mi Pad 1, Redmi Note 4X (MTK), Redmi Note 4X (SD), Redmi Note 4, Redmi Note 3 (MTK), Redmi Note 3 (SD), Redmi Note 2, Redmi Note, Redmi Pro, Redmi 4X, Redmi 4A, Redmi 4, Redmi 4 Prime, Redmi 3S/Prime, Redmi 3, Redmi 2A, Redmi 2/Prime, Redmi 1S, Redmi 1.

miui-9

தற்போது வெளிவரும் புதிய MI மொபைல்கள் defaultஆக இந்த அப்டேட்டுடன்தான் வெளிவரும்.

Image search, app grouping, new icon set, settings, features, sensitivity, performanceனு அடிச்சு தொம்சம் பண்ண வருது இந்த அப்டேட். நாளைக்கு மறக்காமல் எல்லாரும் அப்டேட் வந்துருச்சான்னு செக் பண்ணிக்கோங்க. 1GB per day இன்டர்நெட் ப்ளான் உள்ளவர்கள் இரவு 11மணிக்கு மேல் 12மணிக்குள் அப்டேட் செய்ய ஆரம்பித்துவிடுங்கள் அப்பொழுதுதான் தடையின்றி முழுமையாக உங்கள் புதிய பதிப்பினை பெற செய்ய முடியும்.