Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
வார்டன் உடனான உறவை மகேஷ் துண்டித்துக் கொள்ள வேண்டும் என அவனுடைய அம்மா பார்வதி கடுமையாக நடந்து கொள்கிறார்.
இதனால் கோபமான மகேஷ் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான். அன்பு விடம் மட்டும் அவன் இருக்கும் இடத்தை சொல்லி இனிமேல் சாதாரண மனிதர்களைப் போல் நான் வாழ போகிறேன் என்று சொல்கிறான்.
மித்ராவிடம் சிக்கிய அன்பு-ஆனந்தி
மகேஷ் படும் கஷ்டத்தை பார்த்து அன்புக்கு ரொம்பவும் குற்ற உணர்ச்சியாகி விடுகிறது. இதை ஆனந்திக்கு போன் பண்ணி சொல்கிறான்.
மேலும் நம்முடைய காதலால் யாருக்குமே நிம்மதி இல்லை, இப்படி மற்றவர்களை கஷ்டப்படுத்த காதலே இல்லாம போயிருக்கலாம் போல என்று சொல்கிறான்.
அன்புவின் இந்த வார்த்தை ஆனந்தியை ரொம்பவே கஷ்டப் படுத்துகிறது. ஆனந்தி போனை கட் பண்ணி விட்டு ரொம்பவும் கதறி அழுது கொண்டிருக்கிறாள்.
ஆனந்தி அழுவதை மித்ரா பார்த்து விடுகிறாள்.
ஆனந்தி அழகனை கண்டுபிடித்து விட்டாள் போல அது மட்டும் இல்லாமல் அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொள்கிறாள்.
எப்படியும் மித்ரா இன்னும் சில தினங்களில் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறாள்.
அது மட்டும் இல்லாமல் கண்டிப்பாக இதை மகேஷின் அம்மா பார்வதி இடமும் சொல்வாள்.
ஆனந்தி மற்றும் வார்டன் இருவரையும் ஒரே நேரத்தில் மகேஷின் வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிய பார்வதி திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்தத் திட்டத்திற்கு இதுதான் சரியாக கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டு.