ஐபில்

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. தற்பொழுது அணிகள் ப்ராக்டிஸ் , தீம் பாடல், விளம்பர மார்க்கெட்டிங், டிக்கெட் விற்பனை என கலை கட்ட துவங்கிவிட்டது.

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி வலுவானதாக்கவே கடந்த பல வருடங்களாகவே உள்ளது. என்னினும் ஏலத்தில் இவர்கள் எடுத்த சில முடிவுகள் பலரை ஆச்சிர்யப்படுத்தியது.

மூத்த வீரரான ஹர்பஜன் அவர்களை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கவில்லை. மேலும் அவரை சென்னை அணி எடுத்து. அதே போல் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா , மற்றும் நியூஸிலாந்தின் மிச்சேல் மெக்லேஙஹன் இருவரையும் எடுக்கவில்லை. வேறு எந்த அணியும் அவர்களை சட்டை செய்யவில்லை என்பது தான் ஆச்சர்யமான உண்மை.

Mitchell McClenaghan

இந்த இருவருமே மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடியவர்கள். இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹிண்ட்ராப் வெளியேறுகிறார். இந்த ஐபில் அவர் விளையாட போவதில்லை. இவருக்கு மாற்றுவீரராக மிச்சேல் மெக்லேஙஹன் அவர்களை பேஸ் விளையான 1 கோடிக்கு மும்பை எடுத்துள்ளது.

Mitchell McClenaghan

2015 இல் இருந்து தொடர்ந்து மூன்று சீசனாக மும்பைக்கு விளையாடி உள்ள மிச்சேல் 40 போட்டிகள் விளையாடி 54 விக்கெட் எடுத்துள்ளார். 8.6 என்ற ரன் விகிதத்தில்.

கோச்சிங் ஸ்டாப்

தலைமை பயிற்சியாளராக ஜெயாவார்த்தேனே, பேட்டிங் கோச் ஆக ராபின் சிங், பௌலிங் கோச் ஷென் பாண்ட் , பீலடிங்கை ஜேம்ஸ் கவனிக்கிறார்.

lasith-malinga

இவர்களுடன் இலங்கையின் லசித் மலிங்கா அவர்களை பௌலிங் மெண்டாராக அறிவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.