Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித்துக்கு நன்றி தெரிவித்து, தேவைப்பட்டால் மீண்டும் அழைப்போம் என கூறியுள்ள அண்ணா பல்கலைக்கழகம் MIT காம்பஸ். லெட்டர் உள்ளே .
தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், தன் ஹாபி, பேஷன் என்று அதற்கும் தனி நேர ஒதுக்குவார். பைக், கார் ரேஸிங் , போட்டோகிராபி, மினி ஹெலிகாப்டர் போன்றவை இவரது ஆர்வங்களில் சில.
UAV

THALA
சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியில் உள்ள ஏரோ மாடலிங் (AERONAUTICAL) துறையில் உள்ள மாணவர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டார். இந்த டீம் தக்க்ஷா சர்வதேச அளவில் அசத்தியது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் உலகளவில் 2வது இடத்தைப் பெற்று சாதனை புரிந்தது எல்லாரையும் ஆச்சர்யத்தில் நிகழ்த்தியது.
இந்நிலையில் நேற்று இரவில் இருந்து சமூகவலைத்தளங்களில் அண்ணா பல்கலைக்கழகம் அஜித்துக்கு அனுப்பிய அறிக்கை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆலோசகர் மற்றும் ஹெலிகாப்டர் டெஸ்ட் பைலட் ஆக நீங்கள் இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. தக்க சமயத்தில் நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி.
மேலும் இந்த ப்ராஜெக்ட் முழுமையாக முடிந்துவிட்டதால் உங்களை ஆலோசனை மற்றும் பிற பணிகளில் இருந்து விடுவிக்கிறோம் .
வருங்காலத்தில் உங்களின் வசதிக்கு ஏற்ற வகையில் உங்களின் பங்களிப்பு தேவை என எதிர்பார்க்கிறோம் மேலும் கௌரவ ரோலில் பங்கேற்கலாம் என அதில் தெரிவித்துள்ளனர்.

MIT
அந்த லெட்டரில் 22 மார்ச் 2018இல் அஜித் இணைந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 14 ஜனவரி 2019 இல் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, தற்பொழுது அவரை முழுவதாக இதில் இருந்து விடுவிப்பதும் தெளிவாக தெரிகின்றது .
தன் பணி முடிந்ததும் அதில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற வேண்டும் என்ற இந்த நிலைப்பாடு நமக்கும் ஆச்சர்யத்தையே தருகின்றது. இந்த நேரத்தில் சினிமாபேட்டைக்கு நினைவு வருவது ‘வாழு; வாழ விடு’ மட்டும் தான்.
