கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப், நித்யா மேனன் நடித்திருக்கும் படம் முடிஞ்சா இவன புடி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் தனுஷுக்கு முன்பே சிவகார்த்திகேயன் வந்துவிட்டார்.

இந்நிலையில் லேட்டாக உள்ளே வந்த தனுஷ், சிவகார்த்திகேயனை கண்டுகொள்ளாமல் மற்ற அனைவருக்கும் கைகொடுத்து உள்ளே சென்றுவிட்டார். எனினும் சிவகார்த்திகேயன் விடாப்பிடியாக தனுஷை அழைத்து கைக்குலுக்கி பேசினார்.

மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தனுஷை தான் நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பதாக கூறி இருவருக்கும் பிரச்சனை இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.