இந்தியா என்றுமே கெத்து தான் – அக்ஷய் குமாரின் மிஷன் மங்கல் திரைவிமர்சனம்

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணம் பற்றிய பதிப்பே இப்படம். Mars Orbiter Mission (MOM), அல்லது Mangalyaan எவ்வாறு சாத்தியமானது என்பதனை தான் இப்படம் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இஸ்ரோ சயின்டிஸ்ட் மற்றும் அவர்களின் குடும்ப வாழ்க்கையும் கலந்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் ஜெகன் சகதி.

அக்ஷய் குமார், நித்யா மேனன், வித்யா பாலன், டாப்ஸீ பண்ணு, சோனாக்ஷி சின்ஹா , ஷர்மான் ஜோஷி மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைவான பட்ஜெட், புதிய டீம், குறைந்த இடை உள்ள PSLV யை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என பல விஷயங்களை நமக்கு புரியும் படி அழகாக சொல்லியுள்ளனர். இரண்டு வருட மிஷன் அதனை இரண்டு மணி நேரத்தில் நமக்கு அசத்தலாக கொடுத்துள்ளனர்.

பிளஸ் – அக்ஷய் குமார் , வித்யாபாலன், ஒளிப்பதிவு, இசை

மைனஸ் – அதீத லாஜிக் மீறல்கள், குறைவான நம்பத்தன்மையே வருகின்றது.

சினிமாபேட்டை அலசல் – சச்சின் வாழ்க்கை வரலாற்று படம் வெளிவந்து டாக்குமென்டரி பீல் தான் நம்மில் பலருக்கு கொடுத்தது. எனினும் தோனியின் பயோப்பிக் வெளியாகி ஹிட் அடித்தது. எனவே இப்படக்குழு இரண்டாவது ரூட்டை எடுத்துவிட்டனர். ட்ராமா ஜானரில் கமெர்ஷல் அம்சங்கள் அதிகமாக சேர்த்து படத்தை அசத்தலாகி விட்டனர்.

சாமானிய மனிதனுக்கும் புரியும் படி அமைந்ததே பெரிய பலம் இப்படத்திற்கு. விருது வாங்க படம் எடுப்பதை காட்டிலும், நாம் செய்த சாதனை புரிய வைக்க இது சூப்பர் முயற்சி. ஆசிய நாடுகளில் முதலில் செவ்வாய் சென்ற நாடு என்ற பெருமை நமக்கு தான் உள்ளது. ஆகஸ்ட் 15 ரிலீஸ் செய்தது கூடுதல் ஸ்பெஷல் தான்.

சப் டைட்டில் உள்ளதன் காரணமாக, தாராளமாக திரையில் சென்று பார்த்து விட்டு வரலாம். குறிப்பாக பொடுசுகள் பார்க்கும் பட்சத்தில் அவர்களுக்குள் கண்டிப்பாக சயின்டிஸ்ட் ஆகும் ஆர்வம் அதிகரிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3.25 / 5

Leave a Comment