ஸ்பைடர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றுது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களை தமிழில் பேச மகேஷ் பாபு ரசிகர்கள் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மகேஷ் பாபுவை தமிழ்பட நாயகனாக அறிமுகம் செய்யும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதில் நடிகர் விஷால், இப்படத்தின் நாயகி ரகுல் பிரித் சிங், எஸ்.ஜே.சூர்யா, மதன் கார்கி, பிக்ரமன், ரமேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் கலைப்புலி தானு, ஆர்.பி.சௌத்ரி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் என்பதால், அவரது ரசிகர்கள் பலர் பஸ்கள் மற்றம் ரெயிலில் இவ்விழாவிற்கு வந்திருந்தனர். ரசிகர்களுக்கு சிறப்பு பாஸ் கொடுத்து அனுப்பினர். ரசிகர்கள் அதிகமாக வந்திருந்ததால் அரங்கில் போதிய இடம் இல்லாமல் பலர் வெளியே நின்றுக்கொண்டு இருந்தனர். மாலை 7 மணி அளவில் மகேஷ்பாபு பலந்து பாதுக்காப்போடு அரங்கிற்கு வந்தார். அவரை 57 பாதுகாவலர்கள் சூழ்ந்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியை நடிகர் சதீஷ் மற்றும் பாடகி சின்மயி தொகுத்து வழங்கினர். விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் மேடை ஏறி தமிழில் பேசினர். அப்போது கூச்சலிட்ட மகேஷ்பாபு ரசிகர்கள் தமிழில் பேசாதீர்கள் தெலுங்கில் பேசுங்கள் என்று தெலுங்கில் கூச்சலிட்டனர். இதனால் சில பிரபலங்கள் கோபமடைந்தனர். எஸ்.ஜே.சூர்யா ரசிகர்கள் கோரிக்கையை ஏற்று தெலுங்கில் பேசினார்.

மேடை ஏறிய ஆர்.ஜே.பாலாஜி இது தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழில் தான் பேச வேண்டும் என்று கூறினார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் நீட் தேர்வு குறித்து படம் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதே கருத்தை கூறிய நடிகர் விஷால் முருகதாஸ் பாலிவுட்டிற்கு செல்லக்கூடாது என்றும் கூறினார். முருகதாஸ் பேசும் போதும் ரசிகர்கள் குறிக்கிட்டனர். இதில் கோபமடைந்த முருகதாஸ் சைலன்ஸ் என்று கத்தினர். அப்போது மகேஷ் பாபு எழுந்து தனது ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார்.

பின்னர் பேசிய மகேஷ் பாபு 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்குவது போல இருக்கிறது என தமிழில் நடிப்பது பற்றி கூறினார்.மேலும் துப்பாக்கி படத்தில் விஜய் சொன்ன ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என்ற பஞ்ச் வசனம் தனக்கு மிகவும் பிடித்தமான வசனம் என மகேஷ் பாபு கூறியுள்ளார்.துப்பாக்கி படத்தில் நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பல முறை யோசித்துள்ளேன் என மகேஷ் பாபு மேலும் தெரிவித்துள்ளார்.