புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

இந்தியாவின் மானுஷி சில்லாரை உலக அழகியாக்கிய அந்த கேள்வி என்ன தெரியுமா?

இந்தியாவின் மானுஷி சில்லாரை உலக அழகியாக்கிய அந்த கேள்வி!!

இதற்க்கு முன் உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா ஃபிரியா(1966),ஐஸ்வர்யா ராய்(1994),டயானா ஹேடன்(1997),யயுக்தா மூகே(1999),பிரியங்கா சோப்ரா(2000) ஆகியோர் வரிசையில் 17 ஆண்டுகள் கழித்து மனுஷி சில்லார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார்(20), மருத்துவப் பட்டப் படிப்பை பயின்று வருகிறார். இவர் சீனாவின் சன்யா சிட்டி அரினாவில் 108 நாடுகள் பங்கேற்ற மிஸ் வோல்டு அழகிப் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளார்.

மானுஷி சில்லாரை கேட்ட கேள்வி இதுதான்.

உலகில் அதிகம் சம்பளம் பெருவதற்கான தகுதியடைய வேலை எது? ஏன்?

உலகிலேயே அதிகம் மதிப்பிற்குரியவர் தாய், அதிக சம்பளம் பெரும் தகுதியுடைவர்களும் அவர்களே தான். மேலும் சம்பளம் என்பது வெறும் பணம் மட்டும் கிடையாது என்னைப் பொறுத்தவரை அது அன்பும், மரியாதையும். நமக்காக

பல தியாகங்களைச் செய்தவர்கள் அவர்கள், ஆகையால்  உலகிலேயே அதிகமான சம்பளமாக அன்பையும், மரியாதையையும் பெற தகுதியானவர்கள் தாய் மட்டும் தான்.

Trending News