3 வருடத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் மிஷ்கின்.. நண்பனுக்காக களம் இறங்கும் ஹீரோ

Director Mishkin Next Movie: கோலிவுட்டில் வித்யாசமான இயக்குனர்களுள் ஒருவர் மிஷ்கின். இவர் உதயநிதி ஸ்டாலினின் சைக்கோ படத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். அதன் பிறகு படங்களை இயக்குவதை தவிர்த்து  நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். 

இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிவிட்டார். அதன் தொடர்ச்சியாக வரும் ஆயுத பூஜைக்கு வெளியாக இருக்கும் விஜய்யின் லியோ படத்திலும் முக்கிய கேரக்டரில் மிஷ்கின் நடித்துள்ளார். இந்த நிலையில் பிசாசு 2 படத்தை அடுத்து மிஷ்கின் இயக்க இருக்கும் அவருடைய புதிய படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் கைகோர்த்து இருக்கிறார்.

Also Read: நக்கல் அடித்து மனதை காயப்படுத்தும் 5 இயக்குனர்கள்.. சக நடிகர்களை கலாய்த்து தள்ளும் மிஸ்கின்

கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மிஷ்கின் நெருங்கிய நண்பனான விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கப் போகிறார். ஏற்கனவே பலமுறை இவர்களது கூட்டணிகள் ஒரு படம் வெளியாகும் என இருவரும் கூறிய நிலையில் அதற்கான நேரம் வந்துவிட்டது.

இந்த படம் நிச்சயம் வேற லெவலில் மாஸாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோலவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ்  படத்தில் மிஷ்கின் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: மாவீரன், ஜெயிலர் படத்தால் அடித்த லக்.. டாப் ஹீரோக்களின் பேவரைட்டாக மாறிய நடிகருக்கு கைவசம் குவியும் படங்கள்

இவ்வாறு  நண்பர்களாக இருக்கும் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் புதிய படத்தில் இணை இருப்பதும், அந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க    போவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மிஷ்கின் இந்த படத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்து வைத்துவிட்டார்.

விஜய் சேதுபதி இப்போது தமிழிலும் தெலுங்கிலும் நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருப்பதால் விரைவில் அந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு மிஷ்கின் படத்தில் இணையுள்ளார். விரைவில் இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார், படத்தின் பர்ஸ்ட் லுக் என்ன என்பதையும் பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடப் போகிறது.

Also Read: இயக்குனரா புடிச்சாலும், தயாரிப்பாளரா மன்னிக்கவே மாட்டேன்.. அந்நியன் போல் ஆக்ரோசமாக மாறிய விஷால்!

- Advertisement -spot_img

Trending News