பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா ? கட்டாயம் பாக் 2.0 ரெடி தான் அப்போ 

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து இன்சமாம் உல் ஹக் விலகினார். மேலும் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தர், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பௌலிங் கோச்சான அஸார் முகமது ஆகியோரை நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்  அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மற்றும் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். (அணித்தேர்வின் முடிவையும் அவர் எடுப்பார்) வக்கார் யூனிஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களின் தலையீட்டால் தான் இந்த அதிரடி நடவடிக்கை என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். பாகிஸ்தான் அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன், அந்த டீம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்ல வாழ்த்துக்கள்.

Leave a Comment