ராஜமௌலியின் பிரமாண்ட படமான பாகுபலியில் அவந்திகா என்ற மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் தமன்னா. இரண்டாவது பாகம் அடுத்த மாதம் 28ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், சமீபத்தில் தான் படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா மிக பிரமாண்டமாக நடந்தது.

படத்தில் பணியாற்றியவர்கள் பற்றி பேச அதிக நேரம் கிடைக்கவில்லை என்பதால், ட்விட்டரில் அனைவரும் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.

ஆனால் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த தமன்னாவை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதனால் இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை வந்துள்ளது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.