miruthan-reviewதமிழில் முதன் முறையாக நாய்கள் ஜாக்கிரதை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள தமிழ் சோம்பி படம் தான் இந்த மிருதன்.

ஜெயம் ரவி கதாநாயகனாகவும், இவருக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனனும் நடிக்க மைக்கல் ராயப்பனின், குலோபல் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில், இமானின் இசையமைப்பில் இன்று வெளியாகியுள்ளது .

கதை 

ஊட்டியில் ஒரு இரசாயண திரவத்தை பருகும் நாயின் வெறிச்செயலால் அங்குள்ள மனிதர்கள் ‘சோம்பிகளாக’ மாறி மற்றவரை கடித்து சோம்பிகளாக மாற்றுவதும், அதற்காக ஒரு டாக்டர் கூட்டம் மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் நிலையில் போலிஸ் அதிகாரியான ஜெயம் ரவியின் தங்கை பேபி அனிகாவை டாக்டர் குழுவில் உள்ள ஒருவரால் கடிபடுகிறார். அதன் மூலம் பேபி அனிகாவின் மரபனுவானது இப் புது நோய்க்கான மருந்தாக இருக்கவே, ஜெயம் ரவி மற்றும் போலீஸ் நண்பர் காளியும், தம்மோடு வந்த வைத்தியர் குழுவையும், தங்கையையும் சோம்பிக்களை கடந்து,  மருத்துவ ஆய்வு கூடத்தில் சேர்க்கும் முயற்சில் ஈடுபடுகின்றார்கள்

பாதிக்கப் பட்டவர்கள் தண்ணீருக்கு பயப்படுவதை அறிந்த ஜெயம் ரவி, அதனை ஒரு ஆயுதமாக பயண்படுத்துகின்றார். இறுதியாக தான் ஒருதலையாக காதலிக்கும்  லக்ஷ்மி மேனன் மட்டும் சோம்பிகளிடம் சிக்கிக்கொள்ள அவரை காப்பற்றும் முயற்சியல் இறங்கவே, அதில் ஜெயம் ரவி காயப்பட்டு மிருக மனிதனாக (சோம்பியாக) மாற. முடிவில் என்னவாகிறது என்பதே இந்த மிருதன்

விமர்சனம் 

படத்திற்கு பெரும் பலமே ஜெயம் ரவியின் இயல்பான பாணியில் தனது நடிப்பை வித்தியாசப் படுத்தியுள்ளார். அத்தோடு நண்பர் காளியுடன் இணைந்து டைமிங்கில் காமெடி சென்சை காட்டும் ஜெயம் ரவி முதல் முறையாக பாசமிகு அண்ணனாக அவதாரம் எடுத்துள்ளார் எனலாம்.

ஹீரோயின் லக்ஷ்மி மேனனுக்கு கொடுக்கப்பட்ட டாக்டர் கேரக்டருக்கு ஏற்ப நடித்துள்ளார். இயக்குனர் சக்தி சுந்தர் ராஜன் தனது முந்தைய படங்களான நாணயம், நாய்கள் ஜாக்கிரதையையும் தாண்டி, ஒரு நாயின் மூலம் உருவாகும் “சோம்பி” மனித மிருகத்தை பற்றி எடுத்துள்ளார்.

சிறப்பு 

ஜெயம் ரவியின் இயல்பான நடிப்பு , கதைக்களம், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழில் கண்டிராத விஷயம் என்பதால் அதற்காகவே மனம் திறந்து பாராட்டலாம்

ஜெயம் ரவி-அனிகா செண்டிமெண்ட் காட்சிகள், படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்கின்றது.

படத்தில் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் மற்றும் படத்தொகுப்பாளர் வெங்கட் ரமணன் ஆகியோரின் கை வண்ணம் சிறப்பாக வலம் வரவே, இரண்டே பாடல்களை கொண்ட படத்தில், இமானின்; இசை படத்தை மேலும் வலுவாக்கின்றது எனலாம்.

பலவீனம் 

இந்தப்படம் பல்வேறு கேள்விகளை தருவதும், ஓவர் ஹீரோவிசம் நிறைந்திருப்பதும் படத்தின் பலவீனம் எனலாம்

பகலில் பல காட்சிகளை எடுத்துள்ளனர். இது படத்திற்கு பெரிய மைனஸ். ஹாலிவுட் சோம்பி படங்களில் கூட பகல் காட்சிகள் குறைவாக இருக்கும்.

பல இடங்களில் லாஜிக் மீறல்கள், பெரிய ஆக்‌ஷன், விறுவிறுப்புடன் செல்கையில் காதலை வைத்து கிளைமேக்ஸை நகர்த்தி செல்வது சில தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

ரிசல்ட் :

மொத்தத்தில் மிருதன் தோல்வியை தவிர்த்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையை காட்டுகிறது

ரைடிங் : 2.75/5