Tamil Cinema News | சினிமா செய்திகள்
13 வருடங்களுக்குப் பிறகு வெறி கொண்டு உருவாகும் மிருகம் 2.. ஆதிக்கு பதிலாக இந்த முறை ஹீரோ யார் தெரியுமா?
கடந்த 2007ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் சாமி இயக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் மிருகம். எய்ட்ஸ் விழிப்புணர்வு படமாக உருவாகியிருந்த மிருகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் ஆதி முதல் முதலாக தமிழில் அறிமுகமாகி படமும் இதுதான். ஆதிக்கு ஜோடியாக அந்த காலகட்டத்தில் சென்சேஷனல் ஹீரோயினாக இருந்த பத்மபிரியா நடித்திருந்தார்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு கூறுகிறேன் என்று கொஞ்சம் ஓவர் டோசா உருவாகியிருந்த அந்த படத்தை குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்க்க முடியாது.
இந்நிலையில் அதே போன்ற கதையில் கொஞ்சம் வித்தியாசமாக உருவாக உள்ளதாம் மிருகம் படத்தின் இரண்டாம் பாகம்.

mirugam-cinemapettai
ஆனால் இந்த முறை அதே கதாபாத்திரத்தில் ஹீரோவாக தமிழில் முரட்டு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் ஆர்கே சுரேஷ் நடிக்க உள்ளாராம்.
வில்லன் நடிகராக இருந்து ஹீரோவாக மாறியுள்ள ஆர்கே சுரேஷ் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
