Connect with us
boomerang-movie

‘மிருதன்’ சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைகாட்சி

News | செய்திகள்

‘மிருதன்’ சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைகாட்சி

miruthan-759ஜெயம் ரவி, லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிருதன்’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்கு முதலில் சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்த நிலையில் ரிவைசிங் கமிட்டிக்கு சென்று ‘யூஏ’ சர்டிபிக்கேட்டை படக்குழுவினர் பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து சன் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சன் டிவி இந்த படத்தை கைப்பற்றியதை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் சன் டிவியில் படக்குழுவினர் ‘மிருதன்’ சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள ‘மிருதன்’ திரைப்படத்தில் முதல்முதலாக ஜெயம் ரவிக்கு ஜோடியான லட்சுமிமேனன் நடித்துள்ளார். தமிழில் வெளியாகும் முதல் ஜோம்பி திரைப்படமான இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top