சூப்பர் ஸ்டாருடன் யுத்தத்துக்கு தயாரான அகில உலக சூப்பர் ஸ்டார்.. போட்டோ உள்ளே

சுமோ – மிர்ச்சி சிவா நடிக்க வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். பிப்ரவரி 14 , ஆயிரம் விளக்கு படங்களை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். நிவாஸ் பிரசன்னா இசை. ராஜீவ் மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இவர்களுடன் சுமோ மல்யுத்த வீரரான யோசினோரி தாஷிரோ (Yoshinori Tashiro) நடிக்கிறார். இப்படத்தின் திரைக்கதை அமைப்பது மற்றும் வசனமும் ஸ்டாரான சிவா தான் எழுதியுள்ளாராம்.

ஏற்கனவே பொங்கல் ரிலீஸ் போட்டியில் மாமனார் (ரஜினியின் தர்பார்) vs மருமகன் (தனுஷின் பட்டாஸ்) என பேசிவந்த சூழலில் சுமோ பொங்கல் ரிலீஸ் என புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

sumo release date

Leave a Comment