fbpx
Connect with us

சந்தானத்தின் பாவரிட் இயக்குனரின் ஹாரர் காமெடி படத்தில் மிர்ச்சி சிவா- காமெடியான பர்ஸ்ட் லுக், டைட்டில் உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்தானத்தின் பாவரிட் இயக்குனரின் ஹாரர் காமெடி படத்தில் மிர்ச்சி சிவா- காமெடியான பர்ஸ்ட் லுக், டைட்டில் உள்ளே

ரேடியோ ஜாக்கி டு சினிமா என்ட்ரி கொடுத்தவர் சிவா. வெங்கட் பிரபு கேங்கில் முக்கிய நபர். சென்னை 29 , சரோஜா என கலக்கினார். பின்னர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’ வாயிலாக ‘மிர்ச்சி’ சிவா சோலோ ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அகில உலக சூப்பர் ஸ்டாராக தமிழக மக்களுக்கு காட்சியளித்தார். ரசிகர்களிடத்தில் இப்படத்திற்கு வரவேற்பு கடைத்து முற்றிலும் புதிய பாணியில் தனது நடிப்பை தொடர்ந்தார் சிவா. சுமோ, பார்ட்டி என இரண்டு படங்களை முடித்துவிட்டார்.

shiva

சினிமா மீது தீராத காதல் கொண்டவர் தான் ராம் பாலா. இவரும், இவரின் டீம்மும் லொள்ளு சபா நிகழ்ச்சியை லான்ச் பேடாக வைத்து சினிமா என்ட்ரி கொடுத்தவர். சந்தானம் மற்றும் இயக்குனரின் நெருக்கும் கோலிவுட் அறிந்த செய்தி தான்.

2016 ஆம் ஆண்டு ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த வருடம் படத்தின் இரண்டாம் பாகம், வெளியானது. இரண்டுமே ஹிட் தான். மீண்டும் தனக்கு ஹிட் கொடுத்த ஹாரர் காமெடி ஜானரை தான் கையில் எடுக்கிறார் இயக்குனர். இம்முறை சிவா மற்றும் நிக்கி கல்ராணி இருவரையும் கமிட் செய்துள்ளார்.

mirchi shiva in idiot

இப்படத்திற்கு இடியட் என தலைப்பு வைத்துள்ளனர். நேற்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஸ்க்ரீன் ஸீன் என்டர்டைனமன்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

Continue Reading
To Top