சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. இந்தப் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாகவும், திஷா பாண்டே ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சஷிகாந்த் தயாரித்திருந்தார்.

ரசிகர்களிடத்தில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து முற்றிலும் புதிய பாணியில் இருந்த இப்படம் ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. எனினும் அதன் பின் ஸ்பூஃப் மூவி வகையறா படங்கள் வரவில்லை.

தற்பொழுது ஏழு வருடங்களுக்கு பிறகு அதே டீம் மீண்டும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. சூப்பர் ஸ்டார் ஷங்கர் கூட்டணியில் உருவாகும்  எந்திரன் படத்தின்  பாகத்தின் தலைப்பு 2.0  வை அடிப்படையாக  வைத்து “தமிழ் படம் 2.0 ” என்று தலைப்பு வைத்து சென்ற வாரம் படப்பூஜை நடந்தது.

பின்னர் நேற்று  சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் “எல்லாமே இனிமே ஒரு மாதிரி தான் நடக்கும். மகிழ்ச்சியாக உள்ளது போஸ்டர் ரிலீஸ் செய்வது. அமுதனின் தரமான படைப்பு.  அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா கூட்டணியில். புரட்சி தயாரிப்பாளர் சசிகாந்த், விடு ஜூட்.” என்று கூறி பட போஸ்டரை வெளியிட்டார்.

 

Piracy Partner Tamil Rockers – TP2.0

மேலும் அந்த போஸ்டரில் படம் திரை அரங்கில் 25-05-2018 ரிலீஸ் என்றும்; படம் தமிழ் ராக்கர்ஸில் 26-05-2018 ரிலீஸ்.  பைரசி பார்ட்னர் தமிழ் ராக்கர்ஸ் என்றும்  குசும்பாய் சொல்லியுள்ளார்கள்.

இன்று மிர்ச்சி சிவாவின் பிறந்த நாள். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

முதல் ஆளாக வெங்கட் பிரபு தான், ஹாப்பி பர்த்டே ப்ரோ. அகில உலக சூப்பர் ஸ்டார் என்று தன் வாழ்த்தை சொன்னார்.

மேலும் அவர் நேற்றே தன் ட்விட்டரில், “தமிழ் படம் 2 முதல் லுக் போஸ்டர் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாளை வெளிவரும். நீ செத்த டா சிவா.” என்று சர்ப்ரைஸ் வைத்தார்.

இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் சசிகாந்த் தன் வாழ்த்துக்களுடன் போஸ்டரையும் வெளியிட்டார்.

Thamizh Padam Movie Poster

இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நெட்டிசன்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரும் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் போஸ்டரில் போலீஸ் அத்தியாயம் என்று கூறி இருப்பதால், இம்முறை அணைத்து போலீஸ் படங்களையும் கலந்து பங்கமாக கலாய்க்க போகிறார்கள் என்று எதிர் பார்த்து வந்த நேரத்தில், நம் அரசியல் விஷயத்தை கேலி செய்யும் விதமாக போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.

கண்டிப்பாக இந்த பிறந்தநாளை மிர்ச்சி சிவா வாழ் நாள் முழுவதும் மறக்க மாட்டார்.