fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பெயரே ஒரு தினுசா இருக்கே.. உள்ளூர் சூப்பர் ஹீரோ மின்னல் முரளி விமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

பெயரே ஒரு தினுசா இருக்கே.. உள்ளூர் சூப்பர் ஹீரோ மின்னல் முரளி விமர்சனம்

மார்வெல், டி சி காமிக்ஸ் வாயிலாக தான் சூப்பர் ஹீரோ நமக்கு பரிச்சயம், நம்  ஊரில் இதுபோன்ற பிரபலமான சூப்பர் ஹீரோ எனில் அது க்ரிஷ், சக்திமான் மட்டுமே. நம் வெள்ளிதிரையில் இது போன்ற ஜெகஜால கில்லாடி நாயகனை பார்க்க முடியுமா என ஏங்கிய ரசிகர்களுக்கு கிடைத்த விருந்து தான் இந்த மின்னல் முரளி.

மலையாள சினிமாவின் இளம் இயக்குனர் பேசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் ஹீரோ – குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது மின்னல் முரளி. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்துள்ளனர்.

கதை – டெய்லர் கடை வைத்திருக்கும் டோவினோ, அவனது காதலி ஏமாத்திவிட, அமெரிக்க செல்ல வேண்டும் எனும் முயற்சியில் உள்ளார். மறுபுறம் தனது சிறு வயது பள்ளி தோழி கணவனை உதறிவிட்டு, மகளுடன் ஊருக்கு வருகிறாள், அவளுடன் இணைய முடியுமா என்ற ஏக்கத்துடன் குரு சோமசுந்தரம்.

700 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஓர் அறிய நிகழ்வினால் சக்தி வாய்ந்த மின்னல் இருவரையும் தாக்கி விடுகிறது. இருவரது உடலிலும் சில மாற்றங்கள் தெரியத் தொடங்குகின்றன.

இருவர் செய்யும் செயல்களின் விளைவு, ஒருவரை ஒருவர் தேடும் படி ஆகிறது. இருவரும் சந்திக்க பின்னர் வருகிறது கிளைமாக்ஸ். அசத்தலான சண்டையுடன் வில்லனை அழித்து ஊரை காக்கிறார் நம் ஹீரோ மின்னல் முரளி .

guru somasundharam in minnal murali

சினிமாபேட்டை அலசல் – படத்தின் ஓடும் நேரம் ஒரு குறை தான் என சொல்ல வேண்டும். வில்லன் – ஹீரோ மோதும் காட்சிகள் அதிகம் இடம் பெறவில்லை என்பதும் ஏமாற்றம் தான் . எனினும் சோதனை முயற்சி படம், சாமானிய ரசிகனுக்கும் புரிய வேண்டும் என நினைத்து விட்டார் போல இயக்குனர், ஆதனால் தான் நிறுத்தி நிதானமாக திரைக்கதையை எழுதியுள்ளார் போல தெரிகிறது.

பவர் கிடைப்பது, அதனை பரிசோதிப்பது என பாதி படம் செல்கிறது. எனினும் சிறிய கிராமம் அந்த நான்கு தெருவில் ஒரு சூப்பர் ஹீரோ மற்றும் வில்லன் என்பதனை அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செட் அமைத்து அழகாக படமாக்கியுள்ளனர் இந்த டீம். வேகமாக ஓடுவது, பொருட்களை சக்தி கொண்டு தூக்குவது என சூப்பர் பவர் காட்சிகள் உண்டு படத்தில்.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– சிறப்பான பின்னணி இசை, அம்சமான எடிட்டிங் மிகப்பெரிய ப்ளஸ். படத்தின் ஓடும் நேரம், மற்றும் சுமார் கிராபிக்ஸ் மைனஸ் என சொல்லலாம். ஸ்பைடர் மேன் படத்தின் பல காட்சிகளை இப்படம் நமக்கு நினைவூட்டுகிறது. இப்படத்தினை வெள்ளித்திரையில் பார்த்திருக்கும் பட்சத்தில் செம்ம ட்ரீட் ஆக அமைந்திருக்கும்.

படத்தினை 1990 களில் நடப்பது போன்று காமித்துள்ளனர், விரைவில் சமகாலத்தில் நடப்பது போன்ற இரண்டாவது பார்ட் கட்டாயம் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனினும் இப்படத்தின் வெற்றி அதிக பட்ஜெட், பிரம்மாண்டத்துடன் அடுத்த பார்ட்டுக்கு வழி வகிக்கும் என்பது மட்டும் நிஜம்.

வீ ஆர் வைட்டிங்

சினிமாபேட்டை ரேட்டிங்  3 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Reviews | விமர்சனங்கள்

அதிகம் படித்தவை

To Top