fbpx
Connect with us

அண்ணன்.. நீங்க தான் என்னை காப்பத்தணும்! தம்பிதுரையிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கதறல்!

thambithurai

News / செய்திகள்

அண்ணன்.. நீங்க தான் என்னை காப்பத்தணும்! தம்பிதுரையிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கதறல்!

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா முறைகேட்டை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர்.

இதில், விஜயபாஸ்கரின் வீட்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.4 கோடியும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கட்சியில் விஜயபாஸ்கருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஜெ., மறைவிற்கு பிறகு கட்சியில் முக்கிய அங்கமாக விளங்குபவர்  எம்.பி. தம்பிதுரை.

சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தம்பிதுரையின் ஆலோசனைபடியே செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையின் பிடி இறுகி வருவதாக தெரிகிறது.

இந்த பிடி இறுகுவதற்கு தம்பிதுரை தான் காரணம் என்று அதிமுகவினர் பேசுவதாக தெரிகிறது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தி பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அதிமுகவினன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்காக வருவான வரித்துறை சோதனை நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தம்பிதுரை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரையை சந்தித்திருப்பது ஒரு முக்கிய திருப்புமுனையாக அதிமுகவினரால் பார்க்கப்படுகிறது.

இதனால் தம்பிதுரையை சந்தித்த விஜயபாஸ்கர் இந்த பிரச்சனையிலிருந்து என்னை எப்படியாவது விடுவியுங்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. எனது அமைச்சர் பதவியை பறிகொடுத்தால் வருமான வரித்துறையின் பிடி இறுகும்.

இந்த சூழலில் நீங்கள் தான் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை டெல்லி மேலிடத்தின் மூலம் இதற்கு தீர்வு காண்பார் என்று விஜயபாஸ்கர் நம்புவதாக தெரிகிறது.

இதன் காரணமாகவே அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை எம்.பி.யை சந்தித்துள்ளார் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top