நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆலம்பாளையத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, அவ்வழியாக காரில் வந்த அமைச்சர் தங்கமணியை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால், பல கிலோ மீட்டர் தூரம் மக்கள் கால்நடையாகவே சென்று குடிக்க தண்ணீர் கொண்டு வருகின்றனர். மேலும், பல இடங்களில் தண்ணீர் கிடைக்காததால் மக்கள் சாலை மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆலம்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக , அமைச்சர் தங்கமணி காரில் வந்ததை பார்த்த பொதுமக்கள், அவரது காரை முற்றுகையிட்டனர். இதனால், அமைச்சர் தங்கமணி அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, உடனடியாக எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று சத்தமிட்டனர். பொதுமக்களிடம் அமைச்சர் எவ்வளவு பேசியும் அவர்கள் கேட்காததால் , அமைச்சர் தங்கமணியை காவல் துறையினர் அவர்களிடமிருந்து பத்திரமாக மீட்டுச் சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் தங்கமணி சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here