Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-vijay

Tamil Nadu | தமிழ் நாடு

அஜீத், விஜய்யை வைத்து வண்ணாரப்பேட்டை தாக்குதலை திசை திருப்பும் அமைச்சர்? புரியாமல் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

சமீபகாலமாக தளபதி விஜய்யின் மீது அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான சில படங்களுக்கு தொடர்ந்து அரசியல் ரீதியாக பிரச்சனைகள் கொடுத்து வந்தனர். சர்கார் படத்தில் அவர்களின் கோபம் உச்சிக்கு சென்று படத்தின் பேனர் எல்லாம் கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஒவ்வொரு விஜய் பட வெளியீட்டின் போதும் அரசியல் தலையீடு அதிகமாகவே இருக்கும். அதன் காரணமாக விஜய் படம் வருமா வராதா என கடைசிவரை ரசிகர்களை டென்ஷனில் விடுவதில் அரசியல்வாதிகளுக்கு அப்படி ஒரு சந்தோசம்.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தல அஜித்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறியதாவது, ரஜினிகாந்துக்கு நிகர் தல அஜித் மட்டும் தான் என்றும், விஜய் ரஜினிக்கு நிகர் இல்லை என்றும், அஜித் தல, ரஜினி மலை என டைமிங்கில் நேரடியாக விமர்சித்து செய்துள்ளார். மேலும் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனால் தற்போது விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் இடையே பெரிய புயலை கிளப்பியுள்ளது. சும்மாவே இருவரும் அடித்துக் கொள்வார்கள். அவர்களை வைத்து அரசியல் செய்ய முடிவு செய்து விட்டார்கள் இந்த கால அரசியல் வாதிகள். அது புரியாமல் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அஜித் பெரியவர், விஜய் பெரியவர் என சண்டை போட்டுக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

இஸ்லாமியர் வண்ணாரப்பேட்டையில் தாக்கப்பட்டதை திசை திருப்புவதற்காகவே இந்த மாதிரி செயல்களில் அரசியல்வாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என ரசிகர்கள் யோசித்து செய்தால் நல்லது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top