Politics | அரசியல்
தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா.. நாளை எது வேண்டுமானாலும் நடக்கும்.. ராஜேந்திர பாலாஜி
நடிகர் ரஜினிகாந்த் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாளை என்ன நடக்கும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்றார். நடிகர் ரஜினி ஒரு ஆன்மிகவாதி என்றும் அவர் சொல்வது போன்று நாளை என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது என்று விளக்கம் அளித்தார்.
ரஜினி முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் பாட்ஷா திரைப்படம் வெளியானபோது கட்சி ஆரம்பித்திருந்தால் ரஜினி ஆட்சியை பிடித்திருப்பார் என்று தெரிவித்தார்.
ஆனால் இப்போது வாய்ப்பு இல்லை என்று தெரிவித்த ராஜேந்திர பாலாஜி, ரஜினி மிகவும் லேட்டாக வந்துவிட்டதாகவும் அவருக்கு வயதாகிவிட்டதாகவும், அவரால் பிரச்சாரம் செய்ய முடியுமா என்றே தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
ரஜினி, கமல், விஜய் ஆகியோர் கூட்டணி அமைத்தால் அதனை எதிர்கொள்ள எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அஜித்தை அரசியலுக்கு வருமாறு மறைமுக அழைத்துள்ள ராஜேந்திர பாலாஜி, ஏன் அஜித் அரசியலுக்கு வரமாட்டாரா? தல அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக திகழமாட்டாரா? திரை உலகின் அதிசய நாயகன் தல அரசியலுக்கு வர கூடாதா? நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்றார்.
