சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கடந்த சில தினங்களாக சென்னையில் உள்ள தனக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார்.

இதில் அவர் அரசியல் பற்றிய தன் எண்ணக்கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இதற்கு சில அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு போய்விட்டது. அவர் இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார்.

அவர் ஒரு வியாபாரி. நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. நடிகர்களை மக்கள் மறந்து நீண்ட நாள் ஆகிவிட்டது.

ஏற்கனவே விஜயகாந்த், பாக்கியராஜ், ராஜேந்தர் போன்றவர்கள் கட்சிகள் தொடங்கி என்னானது என்பது எல்லோருக்கும் தெரியும் என அவர் கூறினார்.