தளபதி விஜய்யை வம்புக்கு இழுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்.. ரசிகர்கள் அதிர்ச்சி

முதலமைச்சர் வெளிநாடு பயணத்தில் நிறைய வளர்ச்சித் திட்டங்களை தமிழ் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றார். அதுமட்டுமில்லாமல் இயற்கைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத திட்டத்தை செயல்படுத்தினால் அடுத்த  தலைமுறையினர் நோய் நொடி இல்லாமல் வாழ்வார்கள்.

இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் ஒரு சில கேள்விகளை முன்வைத்தனர்,  அப்போது நடிகர் விஜய் திமுகவில் இணைந்தார் என்னவாகும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’  திட்டத்தை தமிழகம் ஏற்றுக் கொள்ளுமா? இதற்கு பதிலளித்த ஜெயகுமார் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு வரும் என்றால் அதை கண்டிப்பாக ஏற்கமாட்டோம், பாதிப்பு எதுவும் இல்லை என்றால் அத்திட்டத்தை ஏற்போம் என்று கூறியுள்ளார்.

Leave a Comment