நீண்ட நாள் ரசிகர்களுக்கு அடித்த ரஜினியின் கபாலி பீவர் இன்றோடு கொஞ்சம் கொஞ்சமாக குறைய இருக்கிறது.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஒரு கடிதம் உலா வருகிறது. அதில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தனி உதவியாளர் திரையரங்கு ஒன்றுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கடிதத்தை கொண்டு வரும் நபரிடம் கபாலி படத்திற்கான முதல் நாள் முதல் காட்சிக்கு 10 டிக்கெட்டுகளை கொடுத்தனுப்புமாறு கேட்டிருந்தார். சமூக ஊடகங்களில் இந்த கடிதம் வைரலாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார் - வைரமுத்துவிற்கு தாணு பதிலடி

இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், தனக்கு தகவல் அளிக்காமல் , உதவியாளர் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவரை பதவி நீக்கம் செய்ய கோரி பணியாளர் நலத்துறைக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் கூறினார்.