அந்த வாரிசு நடிகர் விஜய் ..அஜீத் நுழையும் போதே டாப் ஸ்டாராக இருந்தவர். அந்த வாரிசு நடிகர் தான் ஹீரோ. அவரின்  படத்தின் சூட்டிங் குற்றாலத்தில் நடந்தது.

அவருக்கு ஜோடி இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் பெயர் கொண்டவர். அவருக்கு ஒரு பழக்கம் ..மினரல் வாட்டரை அண்டாவில் ஊற்றினால் தான் குளிப்பார்.!

குற்றாலத்திற்கு நடிகை வந்த நாள் முதல் மேனேஜரை அழைத்து ‘ எனக்கு குளிப்பதற்கு மினரல் வாட்டர் வேணும் என்று கட்டளை போட்டார்.

மேனேஜரும் வேறு வழி இன்றி தினமும் ஆயிரம் ரூபாய்க்கு மினரல் வாட்டர் வாங்கிக் கொடுத்தார்.

தயாரிப்பாளர் பத்து நாட்களுக்குப் பின் ஷூட்டிங் ஸ்பாட் வந்தார். நடிகை விஷயம் கேள்விப் பட்டு நொறுங்கிப் போனார். சூட்டிங் நடத்தவே பணம் இல்லை.

அன்று இரவு ஹீரோயின் அறைக்குச் சென்று காலில் விழுந்து அழுகிறார் தயாரிப்பாளர் ம்கூம் நடிகை மனம் இறங்கவே இல்லை.

ஆனாலும் அந்த சந்திர ஒளி ஹீரோயின் மனம் இறங்க வில்லை. இந்த விஷயம் கோடம்பாக்கம் ஏரியாவில் பரவியது. கொந்தளித்தனர்.

திக்கி திணறி படத்தை ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர். படத்திற்கு செய்த செலவு கூட வசூல் ஆகவில்லை. நொந்து கடனாளியாகி சொந்த ஊருக்கே போய் விட்டார்.

நடிகை மற்ற கம்பெனிகளிலும் இந்த மினரல் வாட்டர் அளப்பரையைத் தொடர,  வாய்ப்புகள் பறி போனது.

நன்றாக வந்திருக்க வேண்டிய ஹீரோயின் அவர். ஆனால் அறிமுகமாகி இரண்டே வருடத்தில் ராஜஸ்தானுக்கு மூட்டை கட்டிவிட்டார்.