விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழுகை, சண்டை, சச்சரவு, முதல் காதல் அனுபவம் மற்றும் பிக்பாஸ் குடும்பத்தின் பிறந்த நாள் வாழ்த்து என களைகட்டியது.

நடிகர் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BiggBoss நிகழ்ச்சிக்கு தான் இப்போது ரசிகர்கள் அதிகம்.

ஆனால் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது முதல் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், புதிதாக வந்துள்ள புரொமோவில், BiggBoss வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் தனது வேலையை செய்து வரும் நிலையில் வையாபுரி BiggBossசிடம் தனக்கு இங்கு பிடிக்கவில்லை, ஒவ்வொரு நேரமும் அனைவரையும் சமாளிக்க இருக்கிறது என மனம் நொந்து பேசியுள்ளார்.