Milind Soman Feat
மிலிண்ட் சோமன்

மாடல், நடிகர், தயாரிப்பாளர், பிட்னெஸ் ஆர்வலர் என பல பரிணாமங்களை உடையவர். எலெக்ட்ரிகளில் டிப்ளமோ படித்திருந்த பொழுதும் மாடெலாங்கில் தடம் பதித்தவர். அன்றைய காலகட்டங்களில் ‘மேட் இன் இந்தியா’ பாடல் மூலம் பெண்களையும்; தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “கேப்டன் வ்யோம்” வாயிலாக சிறுவர்களையும் கவர்ந்தவர்.

இங்க்லிஷ்,ஸ்வீடிஷ்,ஹிந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழில் படங்களில் நடித்துள்ளார். நம் தமிழில் `பச்சைக்கிளி முத்துச்சரம்’, `பையா’, `வித்தகன்’, `அலெக்ஸ் பாண்டியன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

திருமண வாழ்க்கை

முதலில் மது சாப்ரி என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் சில காலம் இருந்தார். 2006ல் ஃபிரென்ச் நடிகையான மைலேன் ஜம்பனோயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடுகள் ஏற்பட இருவரும் 2009ல் விவாகரத்து பெற்றனர். பின்னர் அங்கிதா கேன்வாருடன் மிலிந்த் சோமனுக்கு காதல் ஏற்பட்டது. கடந்த 22 ஏப்ரல் இவரை திருமணம் முடித்தார்.

Milind Soman – Ankita Konwar
Milind Soman – Ankita Konwar

27 வயது அங்கிதாவை 52 வயதான மிலிந்த் சோமன் திருமணம் செய்து கொண்டதை ஆச்சர்யமாகப் பேசிவருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

எனினும் போட்டோக்களை பார்க்கும் பொழுது யாரும் சொல்லாமல் இந்த வயது வித்யாசம் தெரியாது என்பது தான் நிஜம்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

#Celebrity #Couple #MilindSoman #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

திருமணம் முடிந்த சில தினத்தில், இவர் தன் மனைவியுடன் ஜாகிங் சென்ற போட்டோ, திருமண போட்டோவை விட வைரலாகி வருகின்றது.