fbpx
Connect with us

மைக் மோகனின் மார்க்கெட் சரிய இந்த படம் தான் காரணமாம்.. ஆனா அந்த படம் சூப்பர் ஹிட் ஆச்சே!

mike-mohan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மைக் மோகனின் மார்க்கெட் சரிய இந்த படம் தான் காரணமாம்.. ஆனா அந்த படம் சூப்பர் ஹிட் ஆச்சே!

தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மைக் மோகன்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த மைக் மோகன் ஒரு கட்டத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார்.

அனைத்து நடிகர்களும் ஏதாவது ஒரு தோல்வி படத்தை கொடுத்த பிறகுதான் மார்க்கெட் சரிய ஆரம்பித்து சினிமாவில் இருந்து விலகுவார்கள்.

ஆனால் மைக் மோகன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த விதி என்ற படத்திற்கு பிறகுதான் மோகனின் மார்க்கெட் சரிந்தது என்று கூறினால் நம்ப முடிகிறதா.

ஆம் அந்த கால கட்டங்களில் நடிகர் மைக் மோகனை பல நடிகைகள் காதலித்து வந்தனர்.

அப்படி ஒரு குறிப்பிட்ட நடிகை அவர் மீது உள்ள காதலை அவரிடம் கூறியபோது மோகன் மறுத்ததால் அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது என பொய்யான தகவலை பரப்பி அவரது மார்க்கெட்டை குறைத்து விட்டாராம்.

இதன் பிறகுதான் மோகன் மீது ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தி ஏற்பட்டு அவரது படங்களை பார்க்காமல் தவிர்த்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன.

அந்த நடிகை தற்போது பிரபல நடிகர் மற்றும் இயக்குனரின் மனைவியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

mike-mohan

mike-mohan

Continue Reading
To Top