fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆனந்த் தேவர்கொண்டா நடிப்பில் சூப்பரான படம்- மிடில் க்ளாஸ் மெலடிஸ் விமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

ஆனந்த் தேவர்கொண்டா நடிப்பில் சூப்பரான படம்- மிடில் க்ளாஸ் மெலடிஸ் விமர்சனம்

டோலிவுட்டில் கெத்து ஹீரோவாக சுற்றி வருபவர் விஜய் தேவர்கொண்டா. இவரின் தம்பி நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ள படமே Middle Class Melodies. யதார்த்த சினிமா அதிகளவில் மலையாளத்தில் தான் பார்க்க முடிகின்றது. அது போன்ற உந்துதலை வைத்து எடுக்கப்பட்ட படமே இது. குண்டூர் பேச்சு வழக்கு, அதன் மக்கள், அவர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் என படம் பிடித்து காமித்துள்ளனர் இந்த டீம்.

அறிமுக இயக்குனர் வினோத், கதையை ரெடி செய்தது அவரது நண்பர் ஜனார்த்தனன். இசை சுவீகர் அகஸ்தி, விக்ரம். ஒளிப்பதிவு சன்னி. ஒப்பத்தில் ஆனந்துக்கு ஜோடியாக வர்ஷா பொலம்மா நடித்துள்ளார்.

கதை – தன் கிராமத்தில் இருந்து சென்று குண்டூரில் தனது பாம்பே சட்னி வாயிலாக ஹோட்டல் ஆரம்பித்து செட்டில் ஆகவேண்டும் என்பதே ஹீரோவின் கனவு. ஊரில் சிறிய ஹோட்டல் மற்றும் கேட்டரிங் செய்யும் குடும்பம். தன் அம்மாவிடம் இருந்து சமயலை கற்றவர் ஹீரோ. அப்படியே ஹீரோவின் நண்பர் குண்டூரில் உள்ள செல் போன் கடை ஒன்றில் சேல்ஸ் பெண் ஒருவரை காதலிக்கும் கிளை கதையும் செல்கிறது.

ஹீரோ ஆனந்துக்கு ஹீரோயின் வர்ஷாவுக்கும் பள்ளி நாட்களில் இருந்தே காதல், உறவினர்கள் கூட இருவரும். எனினும் சிறுவயதில் இவர் செய்த குறும்பு காரணமாக வர்ஷா வீட்டில் மாட்டிக்கொள்ள, அதில் இருந்து இருவரும் பேசிக்கொள்வதில்லை.

வர்ஷாவின் அப்பா தனது ஷெட் ஒன்றை லீசுக்கு தர சம்மதிக்கிறார். எனினும் சிட் பண்ட் ஆசாமி ஏமாற்றிவிட, தனது அப்பாவின் நிலத்தை வர்ஷாவின் அப்பாவிடம் விற்று லீசுக்கு எடுக்கிறார். ஹோட்டல் திறக்கிறார், மீண்டும் துளிர்க்கிறது காதல். ஆனால் லாபம் இல்லை வியாபாரத்தில், காதலில் பிரச்சனை என நகர்கிறது திரைக்கதை. பின்னர் அன்பு, பாசம், மனிதநேயம் என மனிதர்களின் பல குணாதிசயங்களை படம் பிடித்து காமிக்கிறார் இயக்குனர். இறுதியில் மனிதநேயம் வெற்றி அடைய ஹீரோ ஜெயிக்க முடிகிறது படம்.

சினிமாபேட்டை அலசல் – தெலுங்கு படமாயினும் நமக்கு புரியும் படி உள்ளது கதையும், திரைக்கதையும். நாம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் நபர்களை சுற்றி தான் நடக்கிறது. ஹீரோ அப்பாவின் அடாவடி பேச்சு, ஹீரோயின் அப்பாவின் பேராசையை, அம்மக்களின் பாசம், நண்பரின் ஜோசிய நம்பிக்கை, ஏமாற்று பேர்விழி மீது நம்பிக்கை வைக்கும் கிராம மக்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். சிறப்பான ஒளிப்பதிவு, மென்மையான இசை, கதாபாத்திர தேர்வு, திரைக்கதை அமைப்பு என அனைத்துமே பிளஸ் தான்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – வீட்டில் அமர்ந்து ஹாயாக பார்க்கக்கூடிய பீல் குட் மூவி இப்படம். சிறிய பட்ஜெட், புதிய டீம் , இந்த கொரானா காலத்தில் நல்ல பாசிட்டிவிட்டயை விதைத்துள்ளனர்.

சினிமாபேட்டை ரேட்டிங் –  3.25 / 5.

middle class melodies

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top