Sports | விளையாட்டு
கில்லி விஜய் பன்ச் வசன ஸ்டைலில் விராட் கோலியை புகழ்ந்த பிரபலம்
இந்திய அணியின் மூன்று பார்மட் கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக உள்ளவர் விராட் கோலி. இவரது தலைமையில் இந்திய அணி கலக்கலாக விளையாடி வருகிறது. டி 20 , ஒரு நாள் போட்டிகளை காட்டிலும் இந்திய அணியின் டெஸ்ட் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் டீம் வெளிநாடுகளிலும் அசத்தல் வெற்றிகளை குவித்ததுள்ளது. பேட்ஸ்மேன்களை மிஞ்சும் வகையில் பௌலர்கள் உள்ளனர். வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடி வருகின்றனர் இந்த் டீம். அதிலும் முதல் பகல் – இரவு டெஸ்ட் நடந்து வருகிறது.
இந்திய கேப்டன் விராட் கோலி, சிறப்பாக ஆடி தனது 27-வது சதத்தை நிறைவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 70 சதங்களை எடுத்துள்ளார். அதிலும் நேற்று சதமடித்ததன் மூலம் கேப்டனாக 41 சதங்கள் அடித்து, ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்துள்ளார் இவர். அதுமட்டுமன்றி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சராசரி 50 க்கு மேல் தான்.
இவரை ட்விட்டரில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மற்றும் இன்று வர்ணனையாளரான மைக்கேல் வாகன் பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். “எந்த பார்மட், என்ன பந்தாக இருப்பினும் இன்றைய ஜெனெரஷனில் விராட் தான் சிறந்த பேட்ஸ்மேன்.”
இதனை தான் அட கில்லி படத்தில் விஜய் பேசும் “இந்த ஏரியா அந்த ஏரியா அந்த இடம்..இந்த இடம். ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லி டா’ என்பது போன்ற ஸ்டைலில் உள்ளது என சிலாகித்து வருகின்றனர்.
Red Ball … White Ball … Now Pink Ball … @imVkohli is the best Batsman across all formats in this era … #100 #INDvBAN
— Michael Vaughan (@MichaelVaughan) November 23, 2019
அட்மின் mind voice be like மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல இருக்கே !
