மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம்  வாயிலாக படங்களை தயாரித்து வருபவர். நாடோடிகள்  இவரின் முதல் படம். அடுத்தடுத்து கோரிப்பாளையம், ஆடு புலி, பட்டத்துயானை, ஈட்டி, மிருதன் போன்ற படங்களை தயாரித்தார்.

சிம்புவை வைத்து இவர் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் எடுத்து பட்ட பாட்டை அனைவரும் அறிவோம். இவரின் தயாரிப்பில் வெளிவர உள்ள படம் ஜீவா நடிக்கும் “கீ”.

                    KEE TRAILER

இப்படத்தின் ஆடியோ வெளீயிட்டு விழா சமீபத்தில்  நடைபெற்ற இந்த படத்தை ஃபிப்ரவரி’ 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

Kee – AL

இந்த படத்தை தொடந்து தான் தயாரிக்கவிருக்கும் இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மைக்கேல் ராயப்பன்….

ஒரு படத்தை ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தை இயக்கிய ஐக் இயக்கவிருக்கிறார். இரண்டாவது படத்தை ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் ஐக் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறதாம்.  ஆனால் இந்த படங்களியில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

விரைவில் மற்ற தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.