Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-sethupathi-salary

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கையில் விலங்கு, ரத்தக்கறையுடன் வெளிவந்த விஜய் சேதுபதி பட போஸ்டர்.. மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிசியாக வலம் வரும் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். அந்த வகையில் லாபம், துக்ளக் தர்பார், அன்னபெல் விஜய் சேதுபதி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இது தவிர 10க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மைக்கேல் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

சந்தீப் கிஷன் இப்படத்தின் நாயகனாக நடிப்பதாகவும், விஜய் சேதுபதி சிறப்பு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கையில் ரத்தக்கறை மற்றும் விலங்குடன் உள்ள இப்படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகக் கூடிய பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதி மட்டுமே ஹீரோ, வில்லன் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். இப்படத்திலும் அது போன்ற ஒரு கதாபாத்திரத்தையே விஜய் சேதுபதி ஏற்றுள்ளார்.

ஒரு ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்திலும், சந்தீப் கிஷன் ‘குல்லி ரவுடி’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகின்றனர். எனவே இப்படத்தை முடித்த பின்னர் இருவரும் மைக்கேல் படத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-sethupathy-michael

vijay-sethupathy-michael

Continue Reading
To Top