நடன மேதை மைக்கேல் ஜாக்சனின் மகள் மைக்கேல் காதர் தற்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற நடன மேதை மைக்கேல் ஜாக்சன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவரது நடனத்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். அவரே பாடல் எழுதி, அதற்கு அவரே இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் அவரே நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தை படைத்து சாதனை புரிந்தவர்.

இந்நிலையில் கடந்த 2009, ஜூன் 25 அன்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதர் என்ற மகளும் மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர். இவர்களில் பாரிஸ் மைக்கேல் காதர் தற்போது நடிகையாக அறிமுகமாக உள்ளார். காமெடி மற்றும் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் அவருடன் பிரபல ஹாலிவுட் நடிகை சார்ஜிஸ் தெரான் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், 2018ஆம் ஆண்டு இறுதியில் இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.