விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், விஜய் ஆண்டனி அடுத்ததாக தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது, மியா ஜார்ஜ் இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  பிச்சைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இவர் ஏற்கெனவே ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். விஷ்ணுவுடன் இன்று நேற்று நாளை என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  பிச்சைகாரன் முதல் வார பிரம்மாண்ட வசூல் வெளியானது !

இப்படத்திற்கு எமன் என்று தலைப்பு வைத்துள்ளனர். வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜீவா சங்கர் இந்த படத்தில் தான் அறிமுகப்படுத்திய நாயகன் மற்றும் நாயகிகளை வைத்தே மீண்டும் புதிய படத்தை இயக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.