fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரசிகரை கேஞ்சவிட்ட ரெய்னா..!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகரை கேஞ்சவிட்ட ரெய்னா..!

கான்பூர்: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின் போது, ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் கான்பூரில் நடந்த 50லீக் போட்டியில், குஜராத், டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணியின் ஸ்ரேயாஷ் ஐயர், 96 ரன்கள் விளாச, டெல்லி அணி, குஜராத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்போட்டியின் நடுவே, குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னாவின் தீவிர ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்துக்குள் பாய்ந்து வந்தார். நேராக ரெய்னாவிடம் சென்ற இவர், அவரிடம் தனக்கு ஒரு ஆட்டோகிராப் போட்டுத்தரும்படி மைதானத்தின் நடுவிலேயே மண்டியிட்டு கொஞ்சினார்.

அம்பயர், மைதான பணியாளர்கள் ஆகியோர் இவரை நோக்கி விரைந்துவர, உடனடியாக பார்ட்டி எஸ்கேப் ஆனார். ஆனால் அவர் ஆசைப்பட்ட மாதிரி அவருக்கு ஆட்டோகிராப் கடைசி வரை கிடைக்கவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top