மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில்,
எங்க போட்டாலும்… எப்பிடி போட்டாலும்…. மேக்ஸ்வெல் சிக்ஸர் மழையாக பொழிய, அந்த அணி, 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பையில் நடக்கும் 51வது லீக் போட்டியில், பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

மும்பை அணியில் வழக்கம்போல எந்த மாற்றமும் செய்யப் படவில்லை. பஞ்சாப் அணியில், சுவப்னிலுக்கு பதிலாக இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றார்.

அதிகம் படித்தவை:  அஸ்வினை கலாய்க்க முயன்று பங்கமாய் வாங்கி கட்டிக்கொண்ட நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீஷம். இந்தியா vs ஆஸ்திரேலியா.

கலக்கல் துவக்கம்:
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் கப்டில் (36) அதிரடி துவக்கம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் மேக்ஸ்வெல், வழக்கம் போல தனது வேகத்தை காட்டினார்.

மேக்ஸ்வெல் ‘வாணவேடிக்கை’:
மும்பை அணி பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட இவர், 21 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி என மொத்தமாக 47 ரன்கள் விளாசி வெளியேறினார்.

சபாஸ் சகா:
இதன்பின் பஞ்சாப் அணியின் ரன்வேகத்தை, மார்ஷ் உடன் தன் தோளில் சுமந்தார் சகா. மார்ஷ் (25) ஒருகட்டத்தில் வெளியேற, சகா தனி ஒருவனாக போராடினார். இவருக்கு அக்‌ஷர் படேல், கம்பெனி கொடுக்க, பஞ்சாப் அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்தது. சகா (93), அக்‌ஷர் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

அதிகம் படித்தவை:  தோனியை புகழ்ந்தவரின் கதி! பெண் பத்திரிக்கையாளர் தலை தப்புமா?

மும்பை அணி சார்பில், பும்ரா, கரண் சர்மா, மெக்லீனகன் ஆகியோர் ​ தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதுவே அதிகம்:
மும்பை அணிக்கு எதிராக 230 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி, இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அதிகரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில், டெல்லி அணி (214 ரன்கள்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது.

எட்டமுடியுமா?
இதுவரை நடந்துள்ள 10 ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக இதுவரை அதிகபட்சமாக 215 ரன்கள் தான் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட ரன்கள்.