Connect with us
Cinemapettai

Cinemapettai

MI 6

Hollywood | ஹாலிவுட்

டாம் க்ரூஸின் அதிரடியில் மிஷன் இம்பாசிபில் 6 : திரை விமர்சனம் !

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸ் நடிப்பில் ‘மிஷன் இம்பாஸிபிள்: ஃபால்அவுட்’ உலகெங்கிலும் ரிலீசாகி வெற்றி நடை போடுகிறது. 1996 இல் வெளியான முதல் பாகத்தில் இருந்தே உலகினை பெரிய ஆபத்தில் இருந்து காக்கும் கதாபாத்திரம் தான் நம் ஹீரோ “இதன் ஹண்ட்”. தன் டீமுடன் இணைந்து அணுஆயுத பாம் வெடிப்பத்தை தடுத்து ,உலகை செவ்வனே  காக்கிறார்.

MI 6

இது வரை வெளியான ஐந்து பாராட்டையும் புதிய இயக்குனரே இயக்கி வந்துள்ளனர். இந்நிலையில் ‘மிஷன் : இம்பாஸிபள் – ரோக் நேஷன்’-ஐ இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவரி மீண்டும் இந்த பார்ட்டை இயக்கி உள்ளார். மேலும் தயாரிப்பிலும் பங்கு கொண்டுள்ளார்.

கதை பழையதாக இருப்பினும்  மேக்கிங் வாயிலாக வெற்றி காண்பதே இக்குழுவின் ஸ்டைல். இம்முறையும் அதனை செய்துள்ளார்கள். வழக்கம் போல டாம் க்ரூஸ் ஓடுவது, பைக் ஸ்டண்ட், பேஸ் மாஸ்க், வானத்திலிருந்து குதிப்பது என்று கலக்கியுள்ளார்.

Tom Cruise MI 6

படத்தின் பிளஸ்

திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை , டாம் க்ரூஸ், சேசிங் காட்சி

படத்தின் மைனஸ்

கிளைமாக்ஸ் காட்சியின் நீளம்

சினிமா பேட்டை அலசல்

இப்படத்தின் ஹைலைட்டாக பேசப்பட்ட ஹெலிகாப்டர் ஸ்டண்ட் அசத்தல் மேக்கிங். திரைக்கதையில் பல இடங்களில் அசத்தல் ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர்.

Mission Impossible 6

Mission Impossible 6

மேலும் ஹீரோவின் முன்னாள் மனைவியை கிளைமாக்ஸ் காட்சியில் கொண்டு வந்ததெல்லாம் மாஸ் பிளானிங். இந்த வயதிலும் ஸ்டண்ட்டில் பின்னிவிட்டார் டாம். எமோஷன், சேசிங், துரோகம் என அனைத்தையும் சம விகிதத்தில் கலந்து மாஸ் மசாலா படமாக அமைந்து மிஷன் பாசிபிள் ஆகியுள்ளனர். இந்த மாதிரி படம் அடுத்த பகுதி கண்டிப்பா வரணும் பா என்ற சிந்தனையோடே நாம் திரையரங்கில் இருந்து வெளி வரும் அளவுக்கு நம்ம திருப்த்தி படுத்திவிடுகின்றனர்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.5 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top