வெளிநாட்டு சரக்கை காட்டி கால்ஷீட் வாங்கிய முதலாளிகள்.. 42 வயசுலயே ஈரக்குலை வெந்து செத்த எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை

MGR: குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இளம் வயதிலேயே உயிரிழந்த பல ஜாம்பவான்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அப்படி தான் எம்ஜிஆரின் செல்லப் பிள்ளையாக இருந்த நடிகர் ஒருவரும் 42 வயதிலேயே குடிப்பழக்கத்தின் பாதிப்பால் ஈரக்குலை வெந்து இறந்து போனார்.

இத்தனைக்கும் ஒரே நேரத்தில் ஐந்து, ஆறு படங்களில் நடிக்கும் அளவுக்கு திறமைசாலியான நடிகர் தான் அவர். ஆனால் குடிப்பழக்கம் அவருக்கு பெரும் கேடாக அமைந்துவிட்டது தான் சோகம். அப்படிப்பட்ட ஜாம்பவான் தான் சுருளி ராஜன். தன்னுடைய கரகரப்பு குரலாலும், டைமிங் காமெடியாலும் அனைவரையும் சிரிக்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.

Also read: முதல் முறையாக கோடியில் வசூல் செய்த 2 படங்கள்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு பாக்ஸ் ஆபிஸில் கொட்டிய பணமழை!

பல முன்னணி ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்திருக்கும் சுருளிராஜன் ஒரே வருடத்தில் 40 படங்கள் வரை நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் இவருடைய கால்சீட்டை வாங்குவதற்காகவே பல தயாரிப்பாளர்கள் நீ நான் என்று போட்டி போட்டு வருவார்களாம்.

அதிலும் சிலர் ஒரு படி மேலே போய் அவருக்கு வெளிநாட்டு சரக்கை காட்டி தேதிகளை வாங்கி விடுவார்களாம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்த அவர் பின்னாளில் மதுவுக்கு அடிமையாகி போனார். ஒரு கட்டத்தில் மதுவை கொடுத்தால் போதும் இவருடைய தேதிகள் கிடைத்துவிடும் என்ற நிலையும் இருந்தது.

Also read: ஒரே ஆண்டில் 55 படங்களில் நடித்து சாதனை படைத்த காமெடி நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு பயத்தை காட்டிய அழியா புகழ்!

இப்படி அதீத குடிப்பழக்கத்தின் காரணமாக இவருக்கு உடல் உபாதையும் ஏற்பட்டது. அதன் காரணமாகவே இவரை தன்னுடைய சொந்த தம்பி போல் பார்த்து வந்த எம்ஜிஆர் வெளிநாட்டு மருத்துவரை வரவழைத்து கூட இவருக்கு சிகிச்சை பார்த்தார். ஆனால் அது அனைத்தும் பலனளிக்காமல் போய்விட்டது.

அந்த வகையில் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தன்னுடைய 42 வது வயதில் சுருளிராஜன் உயிரிழந்தார். இவ்வாறாக நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இந்த ஜாம்பவானின் மரணம் திரைத்துறைக்கு இன்று வரை பெரும் இழப்பாக தான் பார்க்கப்பட்டு வருகிறது.

Also read: சிவாஜி, எம்ஜிஆர் உடன் குழந்தை நட்சத்திரமாய் கலக்கிய ஸ்ரீதேவியின் 6 படங்கள்.. மூன்று வயதில் முருகன் அவதாரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்