சென்னை எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆா் சிலை திறக்கும் விழா நடைபெற்றுது. இதில் நடிகா் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசினாா்.

அங்கு பேசிய ரஜினிகாந்த், அவரின் அரசியல் பிரவேசம் குறித்து எழுந்து வரும் பல்வேறு கேள்விகள், விமர்சனங்கள் குறித்து பேசினார். அதில் முக்கியமானது கொள்கை குறித்து கேட்ட போது எனக்கு தலையே சுற்றிவிட்டது என கூறியிருந்தார்.

பெண் பார்க்க சென்றவனிடன் கல்யாண பத்திரிகை கேட்டது போல கொள்கை குறித்து கேட்டார்கள். மக்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும்.

ஜெயலலிதா இருக்கும் போது ஏன் வரவில்லை என்கிறார்கள். பயமா என்று கேட்டார்கள். ஜெயலலிதா இருந்த போதே நான் குரல் கொடுத்தேன். இப்போதுதான் நல்ல தலைவனுக்கு வெற்றிடம் இருக்கிறது. ஜெயலலிதாகட்சியை கட்டுக் கோப்பாக வைத்து இருந்தார். இந்தியாவிலேயே சிறந்த தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி.

ஆனால் இப்போது வெற்றிடம் இருக்கிறது, அதை நான் நிரப்புவேன். ஐயா, நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான் என்றார் ரஜினி .

முழு வீடியோ லிங்க்