டாக்டர் பட்டத்தை மறுத்த எம்ஜிஆர்.. மரியாதையுடன் சொன்ன அந்த வார்த்தை

60, 70 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த நடிகர் என்றால் அது நிச்சயம் எம்ஜிஆர் ஆகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு தன்னுடைய படங்களில் பல சமூக கருத்துக்களை மக்களுக்கு கூறி அதன் மூலம் பிரபலமானார்.

இதனாலேயே எம்ஜிஆர் திரைப்படம் என்றால் ஆர்வத்துடன் கண்டுகளித்த ரசிகர்களும் உண்டு. எம்ஜிஆரின் மீது தீராத பற்றுக் கொண்ட அவரது ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஏராளமான பெயர்களை வழங்கி கௌரவப்படுத்தினர்.

அதில் புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் செல்வன், வாத்தியார் என்று நிறைய பெயர்கள் அவருக்கு உண்டு. மக்களின் இத்தகைய அன்பை எம்ஜிஆரும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார். அவர் மறுத்த ஒரே ஒரு பட்டம் என்றால் அது டாக்டர் எம்ஜிஆர் என்கிற பட்டம் தான்.

திரைத்துறையில் எத்தனையோ பேர் அவருக்கு டாக்டர் பட்டத்தை கொடுக்க முன்வந்தபோது அவர் அதை அன்புடன் மறுத்துவிட்டார். அதற்கு அவர் ஒரு சிறப்பான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அதாவது டாக்டர்கள் மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.

அவர்கள் பல உயிர்களை காப்பாற்றி சமூகத்தில் மதிப்பும், மரியாதையுடனும் இருப்பவர்கள். என்னால் அவர்களைப் போல் ஒரு உயிரை காப்பாற்ற முடியாது. இதனால் எனக்கு டாக்டர் பட்டம் வேண்டாம் என்று கடைசிவரை மறுத்துவிட்டார்.

இவ்வளவு தன்னடக்கமும், எளிமையும் இருந்த காரணத்தினாலேயே அவர் மக்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாட பட்டார். பிற்காலத்தில் அவர் அரசியலுக்குள் நுழைந்து முதலமைச்சராக பதவியேற்று பல மக்களுக்கு நல்லது செய்தார்.

அவருடைய அந்த நல்ல குணத்திற்காகவே ஒரு முறை முதலமைச்சர் தேர்தலின் போது உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்த போதும், பிரச்சாரம் செய்யாமலேயே தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். இவ்வளவு சிறப்பு கொண்ட எம்ஜிஆர் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்