படத்தில் தான் ஹீரோ ஆனால் நிஜத்தில் வில்லன்.. பொறாமையால் சக நடிகரை நிஜமாகவே தாக்கிய எம்ஜிஆர்

சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்ற நடிகருக்கும் இடையில் போட்டி பொறாமை இருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அந்த போட்டி பொறாமை ஆரோக்கியமானதாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. அதுவே சற்று சீரியஸாக மாறினால் ஆபத்து தான். அப்படி தான் ஒரு சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

கடந்த 1945 ஆம் ஆண்டு பி.என்.ராவ் இயக்கத்தில் வெளியான படம் தான் சாலிவாகனன். இப்படத்தில் ரஞ்சன், வசந்தா, டி.எஸ்.பாலையா, எம்ஜிஆர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் இப்படத்தில் எம்ஜிஆர் ஹீரோவாக அல்ல வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் என்றால் ஹீரோ வில்லன் இடையே சண்டைக்காட்சி இல்லாமல் இருக்குமா என்ன? அதுவும் இன்றைய படங்களில் இருப்பது போல் அப்போது கிடையாது. அந்த காலத்தில் படங்களில் சண்டை என்றாலே வாள் அல்லது கத்தி சண்டை தான் பிரபலம். அப்படி ஒரு வாள் சண்டை தான் சாலிவாகனன் படத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்த வாள் சண்டையின்போது எம்ஜிஆர் உண்மையாகவே வாளை நடிகர் ரஞ்சன் மீது வீசி விட்டாராம். அது அவரது தோள்பட்டையில் குத்தி நின்றுள்ளது. சற்று கீழே இறங்கி நெஞ்சில் குத்தியிருந்தால் அவ்வளவு தான் உயிரே போயிருக்குமாம். ஆனால் உடனடியாக முதலுதவி செய்து ரஞ்சனை காப்பாற்றி விட்டார்கள். அவரும் சில மாதங்கள் ஓய்விற்கு பின்னர் மீண்டும் படத்தில் நடிக்க தொடங்கினார்.

அந்த சமயத்தில் எம்ஜிஆரைவிட ரஞ்சன் தான் சிறந்த வாள் வீசும் வீரன் என்று பெயர் பெற்றிருந்தாராம். இதனால் எங்கே தனது மார்க்கெட் போய்விடுமோ என்று பயந்த எம்ஜிஆர் வேண்டும் என்றே சண்டை காட்சியின் போது வாளை ரஞ்சன் மீது வீசியதாக கூறப்படுகிறது. படங்களில் ஹீரோவாக வாழ்ந்த எம்ஜிஆர் நிஜ வாழ்க்கையில் ஒரு வில்லனாக வாழ்ந்திருப்பார் போலும்.

என்னதான் தொழில் போட்டி இருந்தாலும் இப்படியா செய்வது. ஒருவேளை அவர் வீசிய வாள் நெஞ்சில் பட்டு நடிகர் ரஞ்சன் உயிர் பிரிந்திருந்தால் நிலைமை என்னவாகும்? தொழில் போட்டிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் போலயே?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்