சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மீள முடியாத துயரில் இருந்த சரோஜாதேவி.. கோபத்தை மறந்து எம்ஜிஆர் செய்த பேருதவி

அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சரோஜாதேவி. இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். சரோஜாதேவி பெரும்பாலும் எம்ஜிஆருடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.

இவர்களது நடிப்பில் வெளியான அன்பே வா, படகோட்டி, எங்கள் வீட்டுப்பிள்ளை, நாடோடி மன்னன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அதேபோல் எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் வெளியாகும் படங்களில் உள்ள பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கேட்கப்பட்டது.

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடல் தற்போதும் ரசிகர்கள் விரும்பி கேட்கின்றனர். அவ்வாறு இவர்கள் கூட்டணியில் படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக வெள்ளி விழா காணும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில் சரோஜாதேவி மீது ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக எம்ஜிஆர் சில காலம் பேசாமல் இருந்தார்.

அதனால் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க தொடங்கினார். இந்நிலையில் சரோஜாதேவியின் கணவர் இறந்த செய்தி கேட்டு எம்ஜிஆர் தனது மனைவி ஜானகியுடன் உடனடியாக பெங்களூர் சென்றுள்ளார். அங்கு சரோஜா தேவியிடம் ஆறுதல் கூறி உள்ளார்.

மேலும் இந்த மீளா துயரத்தில் இருந்தால் நீ வெளிவரவேண்டும். இல்லையென்றால் இதையே நினைத்துக் கொண்டே இருந்தால் மனதில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று எம்ஜிஆர் சொல்லி உள்ளார்.

அப்போது எம்ஜிஆர் அரசியலில் இருந்ததால் சரோஜாதேவிக்கு எம்பி பதவி தருமாறு ராஜீவ் காந்தியிடம் சிபாரிசு செய்கிறேன் என கூறியிருந்தார். ஆனால் சரோஜாதேவிக்கு அரசியலில் வருவதில் ஈடுபாடு இல்லை. இந்நிலையில் சரோஜாதேவிக்கு ஒரு பிரச்சனை என்று தெரிந்தவுடன் பழசை மறந்து எம்ஜிஆர்  ஆறுதல் கூறியது அவருடைய நல்ல குணத்தைக் காட்டுகிறது.

- Advertisement -

Trending News