எம்ஜிஆர் முன்பே சிவாஜியை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்த தள்ளிய பிரபலம்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

100 ஆண்டுகள் தாண்டிய தமிழ் சினிமா இந்த கலை உலகிற்கு பல ஒப்பற்ற கலைஞர்களை தந்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானவர் அந்த கவிஞர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15000 பாடல்கள் மேல் எழுதியுள்ள அவர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார். 1950 முதல் பாடல்கள் எழுதி வந்த வாலி எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் தற்போதுள்ள சிவகார்த்திகேயன் வரை என பல நடிகர்களுக்கு பாடல் எழுதி உள்ளார், சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இவர் எம்.ஜி.ஆருக்கு 63 படங்களிலும் சிவாஜிக்கு 70 படங்களிலும் பாடல்கள் இயற்றியுள்ளார். அவர்கள் இருவருடனும் இதனால் நெருங்கியும் பழகி உள்ளார். அன்று முதல் இன்று வரை எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய்-அஜித் என தொழில் முறை போட்டி இருப்பதை தவிர்த்து விட முடியாது. நடிகர்கள் நட்புடன் பழகி வந்தாலும் அவர்களுக்குள் சின்ன சின்ன போட்டிகள் உள்ளதை யாராலும் முறியடிக்கவும் முடியாது அவ்வாறாக எம்.ஜி.ஆரூக்கும் சிவாஜிக்கும் தொழில் முறை போட்டி உலாவிய காலத்தில் யாரும் ஒருவரிடத்தில் இனொருவரை புகழுந்து பேசுவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர்.

ஆனால் ஒரு முறை எம்.ஜி.ஆரின் முன் வாலி அவர்கள் சிவாஜியை புகழ்ந்து பேசினார். பேசும் பொது சிவாஜி நடிக்கும் பாத்திரங்களை யாராலும் ஏற்று நடிக்க முடியாது எனவும், அவரை போல சிறந்த நடிகர் யாரும் இல்லை எனவும் வாலி கூறினார். இதற்கு பெரிதும் அலட்டி கொள்ளாத எம்.ஜி.ஆர் அவர்கள் நீங்கள் கூறுவது உண்மை தான் சிவாஜியை போல ஒரு சிறந்த நடிகர் இல்லை எனவும் ஆனால் அவருக்கு அடுத்த படியாக நடிப்பில் முத்துராமன் சிறந்து உள்ளதாக கூறினார்.

எம்.ஜி.ஆர் ஆரம்ப காலம் முதலே தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலை நிறுத்தி கொண்டார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் அரசியலையும் மக்களையும் பற்றியே இருக்கும். அவருக்கு அரசியல் ஆர்வமும் அதிகம் இருந்ததால் அவ்வாறான படங்களையே பெரும்பாலும் தேர்ந்து எடுத்து நடித்தார், பின்னர் நிஜ வாழ்விலும் அரசியலில் தனி கட்சி தொடங்கி முதலமைச்சராகவும் அமர்ந்தார்.

சிவாஜியோ மறுபுறம் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களையே பெரிதும் ஏற்று நடித்தார். நடிப்பில் சற்று எம்.ஜி.ஆரை விட சிறந்த நடிகர் என பெயரும் பெற்றார். ஆனால் எம்.ஜி.ஆரை போல அரசியலில் சிவாஜியில் பெரிதும் வெற்றி பெற முடியவில்லை.

வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டு என்பது போல இருவரில் ஒருவர் சினிமாவில் சற்று ஆதிக்கம் செலுத்தினாலும், மற்றொருவர் அரசியலில் பெரும் பங்காற்றினார். என்ன இருந்தாலும் இருவரும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்