சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து அதன்பின்பு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதிலிருந்து ரஜினிக்கு அவருக்கு ஏறுமுகம்தான். ஓரிடத்தில் கூட சரிவை சந்தித்தது இல்லை. தற்போது வரை ரஜினி ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
ஆனால் ரஜினிக்கு முன்னதாகவே தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த பெருந்தலைவர் எம்ஜிஆர். 1947 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் ராஜகுமாரி. எம்ஜிஆருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதிலிருந்து அவருக்கு ஏறுமுகம்தான்.
அவர் நடிப்பில் வெளியான ரிச்சாக்காரன் படம் மிகப்பெரிய வசூலைக் குவித்தது. எம்ஜிஆர் நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல பரிமாணங்களைக் கொண்டவர்.
இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் 30 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தார்.
அதுமட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். எம்ஜிஆர் திரைப்படங்கள் மூலம் பாமர மக்களின் மனதில் இடம் பிடித்தார். அவர் படங்களில் இடம்பெறும் வசனங்களும், பாடல்களும் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.
இதன் மூலம் அரசியலிலும் கால் பதித்தார். 1977 இல் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். இதைதொடர்ந்து இறக்கும் வரை மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் எம்ஜிஆர்.
இவர் முதலமைச்சராக உள்ள போது தமிழ்நாட்டு மக்களுக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்தார். எம்ஜிஆர் கிட்டத்தட்ட 11 ஆண்டுகாலம் நாட்டையும் ஆட்சி செய்தார். இவர் இறந்து பல வருடங்கள் ஆகியும் தற்போதும் எம்ஜிஆருக்காக அதிமுகவில் வாக்களிப்பவர்கள் உண்டு. அவ்வாறு மக்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு உள்ளவர் எம்ஜிஆர்.