எம்ஜிஆர் PS படத்தை என்னை எடுக்க சொன்னாரு.. வந்தியத்தேவன், குந்தவை யார் தெரியுமா?.

மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகுவதால் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு படு ஜோராக நடத்திக் கொண்டிருக்கிறது.

அதிலும் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பல சுவாரசியமான தகவல்களை மேடையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

Also Read: 80 வயதிலும் கனவை நினைவாக்கிய பாரதிராஜா.. நடிப்பையும் தாண்டி விதை தூவிய இயக்குனர் இமயம்

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பலரும் முயற்சித்தனர். அதிலும் குறிப்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படத்தை பாரதிராஜாவை இயக்கச் சொல்லி இருக்கிறார். அதில் வந்தியத்தேவன் மற்றும் குந்தவை கதாபாத்திரத்தில் இவர்கள்தான் நடிக்க வேண்டும் என்றும் ஸ்டிட்டாக சொன்னாராம் .

உலக நாயகன் கமலஹாசனை வந்தியத்தேவனாகவும், ஸ்ரீதேவியை குந்தவையாகவும் நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் அந்த சமயத்தில் எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அது நடக்காமல் போனது. நல்ல வேலை நான் அதை எடுக்காமல் போனேன்.

Also Read: 80 வயதிலும் மகனை தூக்கி விடும் பாரதிராஜா.. புது அவதாரம் எடுத்த மனோஜ்

ஒருவேளை எடுத்திருந்தால் நிச்சயம் சொதப்பி இருப்பேன். அதனால் தான் இந்த படத்தை கடவுள் மணிரத்தினத்திடம் கொடுத்திருக்கிறார் என்று பாரதிராஜா வெளிப்படையாக பேசினார். மேலும் மணிரத்தினம் இந்த படத்தில் ஹீரோயின்களை லட்டு லட்டாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு மணிரத்தினம் எவ்வளவு அழகாக உயிர் கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்க்க கல்கி உயிரோடு இல்லாமல் போய்விட்டார் என்று மேடையில் பாரதிராஜா பேசினார்.

Also Read: 42 படங்களில் ரெண்டே படம் தான் சொந்தமான கதையில் இயக்கிய பாரதிராஜா.. அப்ப அவரு ஜெயிச்சது எப்படி தெரியுமா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்