முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழ் பெற்ற நடிகையாக இருந்த போது சூட்டிங்கில் பணியாற்ற உதவிப் பெண்கள் வருவார்கள்.

குடை பிடிப்பது, மேக்கப் பேக் சுமப்பது, தண்ணீர், ஜூஸ், காபி தேவை என்றால் ஊற்றிக் கொடுப்பது, இதுதான் பெண் உதவியாளர்களின் பணி.

ஆனால் நடிகை ஜெ., விடம் நிரந்தரமாக யாரும் பணியாற்ற இயலாது என்கிறார்கள். என்ன காரணமாக இருக்கும்..? படிங்க. ‘

‘ராமன் தேடிய சீதை’ ஷூட்டிங் ஜம்முவில் நடந்தது. முதல் நாள் ஷூட்டிங் திருவளர் செல்வியோ..  நான் தேடிய தலைவியோ என்கிற பாடல் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.

எம்ஜிஆர் வந்திருந்ததால் ,  அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் அனைவருக்கும் மதிய விருந்தளிப்பதாக கூறியிருந்தார். ஹசீனா முகமத் என்பவர் தான் விருந்துக்கு அழைத்திருந்தார்.

அதிகம் படித்தவை:  தீனா படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸிடம் அஜித் வைத்த வித்தியாசமான கோரிக்கை...

பகல் பனிரெண்டு மணிக்கே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அனைவரும் சென்று விட்டார்கள்.

எம்ஜிஆரின் உதவியாளரும் ஜெ., வின் பணிப்பெண்ணும் எப்படி அங்கு போவது என்று தெரியாமல் தூரத்தில் நின்றார்கள்.

எம்ஜிஆர், ஜெ.,ஒரே காரில் சென்று விட்டார்கள். விருந்து நடக்கும் வீட்டில்    இறங்கிய மக்கள் திலகம் இரண்டு உதவியாளர்களுக்கும் கார் அனுப்பினார்.

அன்று மாலை மக்கள்திலகம் சற்று மூட் அவுட் ஆகி காணப்பட்டார். யாருக்கும் விவரம் புரியவில்லை. ஷாட் முடிந்து தனியே போய் உட்கார்ந்து விடுவார்.

செல்வராஜை அழைத்து யாரையும் அருகில் விடாதே என்று கூறிவிட்டார். ஜெ., ஆடிய காட்சிகள் ஷூட் ஆகியது.

ஒரு சேர் கொண்டு வரச்சொல்லிய ஜெ.,  எம்ஜிஆர் இருக்கும் இடத்திற்கு சென்றார். என்ன மூட் அவுட் என்று கேட்டார் ஜெ.,

அதிகம் படித்தவை:  வைரலாகுது அக்ஷரா கமலின் ஜிம் போட்டோ. மகளுக்கு அறிவுரை கூறிய கமல் !

அவ்வளவுதான் கடுங்கோபத்தில் ஜெ.,வை திட்ட ஆரம்பித்தார் எம்ஜிஆர். “அது என்ன பழக்கம் யாராக இருந்தாலும் காலால் மிதிப்பது..? உன் உதவியாளர்களும் மனிதர்கள் தானே?..பாவம் அந்தப் பெண் நடக்கவே சிரமப்படுகிறாள் பாரு..! நீ மிதித்ததை நான் பார்த்தேன்”

“முதலில் காலால் மிதிப்பதை நிறுத்து. அப்போது தான் நிரந்தரமாக உனக்கு உதவியாளர்கள் இருப்பார்கள்”

“நீ கொடுக்கும் பணத்தை விட அவர்களுக்கு தன்மானம் முக்கியம்” என்று  கூறி அட்வைஸ் செய்ய அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம் ஜெ.,

பின்பு ஒருமுறை எம்ஜிஆரின் உதவியாளர் செல்வராஜ் பகிர்ந்து கொண்டார். இந்தக் குணம் ஜெ.,விற்கு கடைசிவரை போகவே இல்லை. அதைவிட அதிகக் கோபம் அவரிடம் இருந்தது என்கிறார்கள் ஜெ.,வை நன்கு அறிந்தவர்கள்.

நன்றி: மோகன்தாஸ்.